வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று கனமழை:
அதன்படி,இன்று கன்னியாக்குமரி,திருநெல்வேலி,விருதுநகர்,தென்காசி தேனி,திண்டுக்கல்,மதுரை,நீலகிரி,கோவை,திருப்பூர்,கரூர், நாமக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,வேலூர்,திருப்பதூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்,தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…