#அலர்ட்:50 கிமீ வேகம்;தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிரட்டப் போகும் கனமழை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,ஈரோடு,தருமபுரி,சேலம், கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,தமிழக கடலோரப்பகுதி,தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையிலான வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 7, 2022