#அலர்ட்:சூறாவளிக் காற்று…தமிழகத்தில் இன்று மிரட்டப் போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

Default Image

தமிழ்நாட்டில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல்,கரூர்,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும்,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு,கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்,தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள்,மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இடையிடையே 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi