வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்து,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,அடுத்த சில மணிநேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து,மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், 150 கிமீ வரை காற்று வீசக்கூடும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அசானி புயல் காரணமாக சென்னை வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சென்னையிலிருந்து விசாகப்பட்டினம்,ராஜமுந்திரி,விஜயவாடா ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்களும்,அதேபோல,ராஜமுந்திரி விசாகப்பட்டினம்,விஜயவாடா,ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மேலும்,சென்னையிலிருந்து மும்பை,ஜெய்ப்பூர்,கொல்கத்தா, பெங்களூா்,ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்க்கு செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், சென்னையில் இருந்து அந்தமானிற்கு இன்று காலை 8.15 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் காலை 11.30 மணிக்கும், இன்று காலை 8.30 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் மதியம் 1 மணிக்கும் காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே,அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் நேற்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…