கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கெட்டுப்போன சிக்கன்:
அந்த வகையில்,நாகையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில்,310 கிலோ கெட்டுபோன சிக்கன் பறிமுதல் செய்தனர்.அதைப்போல,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
திடீரென வாந்தி,மயக்கம்:
இந்த சூழலில்,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் நேற்று இரவு ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தற்போது மாணவர்கள் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின்னர்,கிரீன் லீப் உணவகத்துக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடைகளை மூட உத்தரவு:
இந்நிலையில்,தமிழகத்தில் ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
மேலை நாட்டு உணவு:
“ஷவர்மா என்பது மேல்நாட்டு உணவு.அது என்னவென்றால் பழைய கறியை ஒட்டுமொத்தமாக சுருட்டி வைத்து சுரண்டி கொடுப்பார்கள். இத்தகைய ஷவர்மா மேலைநாடுகளில் அங்குள்ள சூழலுக்கு தான் பொருந்தும்,அங்கு மைனஸ் டிகியில் வெளியில் வைத்திருந்தாலும் கெடாமல் இருக்கும்.ஆனால்,நாள்பட்ட மாமிசம் என்பது சரியான ஃப்ரீசிங்(Freezing) இல்லை என்றால் கெட்டு போய்விடும்.
வியாபார நோக்கம்:
தற்போது இளைஞர்கள் ஏராளமானோர் இதனை விரும்பி உண்கின்றனர் என்பதற்காக பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்குரிய பாதுகாப்பான வசதிகள் இல்லாமலேயே இந்தியா முழுவதும் அவை விற்பனைக்கு வந்துள்ளன.நமது நாட்டில் நிலவும் தட்பவெப்பதிற்கு ஷவர்மா ஒத்து வருமா? என்று யாரும் பார்ப்பதில்லை,ஷவர்மாமை பதப்படுத்த முடியுமா என்றும் யாரும் பார்ப்பதில்லை.மாறாக, வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு அதை விற்பனை செய்கிறார்கள்.
1000 கடைகளுக்கு மேல்:
அந்த வகையில்,சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,முதல்வரின் வழிகாட்டுதலின்படி,தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளுக்கு சென்று உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி,1000 கடைகளுக்கு மேல் அபராதம்,அறிவுறுத்தல்,ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்தும்,தமிழகம் முழுவதும் ஆய்வுகள் துரிதப்படுத்தப்படும்.எனவே,ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
ஷவர்மாவை சாப்பிட வேண்டாம்:
எனினும்,மக்களுக்கு ஓர் வேண்டுகோள்,நமக்கான உணவு நிறைய உள்ளது.அதை விட்டுவிட்டு ஷவர்மா போன்ற புதிய பெயர்களில் வரும் உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…