#Alert:வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை:வங்கக்கடலில் ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
வங்கக்கடலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,தென் தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு மழை:
இதனிடையே,தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும்,ஏப்ரல் 6,7 ஆகிய தேதிகளில் அந்தமான்,வங்கக்கடல் பகுதிகளில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.