நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்,சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:”கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த பாதிப்பு,தற்போது 100 ஆக பதிவாகி உள்ளது.மேலும்,அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே,கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம்” என அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி,பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் அரசின் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தனிமனித இடைவெளி,முகக்கவசம் அணிதல் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…