#Alert:நாளை உருவாகிறது ‘அசானி’ புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published by
Edison

வங்கக்கடலில் நேற்று காலை தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நாளை (மே 8 ஆம் தேதி) புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,ஆந்திரா, ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,தமிழகத்தை பொறுத்தவரை இதன் தாக்கம் இருக்காது எனவும் வெப்பநிலை அதிகரிப்பு தான் இருக்கும் எனவும்,குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும்,இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,அந்தமான் கடல், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Recent Posts

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.., த.வெ.க கல்வி விருது விழா.!அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.., த.வெ.க கல்வி விருது விழா.!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.., த.வெ.க கல்வி விருது விழா.!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து…

18 minutes ago
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!

வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய…

29 minutes ago
கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!

சென்னை : மேற்கு வங்கம் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று…

1 hour ago

“கப் தான் டார்கெட்”…பஞ்சாப்பை நொறுக்கி ஃபைனலுக்கு முன்னேறிய பெங்களூர்!

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

10 hours ago

பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

11 hours ago

கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…

13 hours ago