#Alert:நாளை உருவாகிறது ‘அசானி’ புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் நேற்று காலை தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நாளை (மே 8 ஆம் தேதி) புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,ஆந்திரா, ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,தமிழகத்தை பொறுத்தவரை இதன் தாக்கம் இருக்காது எனவும் வெப்பநிலை அதிகரிப்பு தான் இருக்கும் எனவும்,குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும்,இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,அந்தமான் கடல், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
A Low Pressure Area lies over South Andaman Sea & adjoining Southeast BoB at 0830 hours IST of today, .To move northwestwards and intensify into a Depression over southeast Bay of Bengal by 7th May evening and into a Cyclonic Storm over eastcentral BoB by 8th May evening pic.twitter.com/37GFGOH4Bt
— India Meteorological Department (@Indiametdept) May 6, 2022