#Alert:இன்று முதல் 3 நாட்கள்;தமிழகத்தில் மிரட்டப் போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வளிமண்டல வெப்பச்சலனம் காரணமாக,இன்று முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,சேலம்,கிருஷ்ணகிரி,தருமபுரி, நாமக்கல்,கரூர்,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் நிலவும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும்,இன்று இலட்சத்தீவு பகுதி,கேரளா,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா,இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,நாளை மற்றும் நாளை மறுநாள் கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 15, 2022