#Aler:தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்றும்,நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
சென்னை:தமிழகத்தின் திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும்,நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில்(நீலகிரி, கோவை, திருப்பூர்) ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,திண்டுக்கல்,தேனி,விருதுநகர்,தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்,இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள்(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை) மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை:
சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,அதே சமயம், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35°C மற்றும் 27°C ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28.03.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு. pic.twitter.com/On8Ofl8Pfw
— TN SDMA (@tnsdma) March 28, 2022