மது போதையில் கள்ளக்காதலியை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கள்ளக்காதலன்!

Default Image

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம்பட்டியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி ஆவார்.இவரது மனைவி சுலோச்சனா.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளன.இந்நிலையில் அண்மையில் சுலோச்சனா தீடீரென்று மாயமாகியுள்ளார்.

இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.பின்னர் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்துள்ளனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் மதுபோதையில் அவர் ஒரு கொலை செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் திருச்சியில் கொத்தனார் வேலை பார்த்து வருவதாகவும் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சுலோச்சனாவிற்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அடிக்கடி வேலூருக்கு சென்று வந்ததாகவும் இதன் காரணமாக அவர் மனைவிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.மேலும் தம் பெயரில் உள்ள வீட்டையும் சொத்துக்களையும் சுலோச்சனா பெயரில் எழுதிவைத்துவிடுவதாக ஆசைவார்த்தை கூறியதாக கூறியுள்ளார்.

மேலும் சுலோச்சனாவிற்கும் அவருக்கும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது அவர் பெயரில் உள்ள சொத்துக்களை எழுதிக்கொடுத்தால் மட்டுமே நாம் சத்திக்கமுடியும் என்று சுலோச்சனா கூறியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மதுபோதையில் அங்கிருந்த கம்பியால் சுலோச்சனாவை ஓங்கிஅடித்ததாகவும் பின்னர் சுலோச்சனா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவர் மூச்சு நின்றதும் அவர் இறந்ததை உறுதி செய்த அவர் செய்வதறியாது வீட்டிற்குள்ளே உள்ள கழிவறையில் அவரது சடலத்தை மறைத்து வைத்துவிட்டு எதுமே நடக்காதது போல் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சுலோச்சனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay