மக்களே…இந்த செய்தி தவறானது – வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.அதாவது,கடந்த ஜூலை 6 முதல் ‘அல்பெலியன் நிகழ்வு’ எனப்படும் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்,குறிப்பாக, சூரியனுக்கும்,பூமிக்கும் இடையே உள்ள 9 கோடி கிமீ அளவிலான வழக்கமான தூரம்,அல்பெலியன் நிகழ்வினால் 15 கோடியே 20 லட்சம் கிமீ ஆக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால்,கடந்த ஆண்டை விட தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவும் என்றும்,இதன்காரணமாக,உடல்வலி,காய்ச்சல்,இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டது.இதனை தவிர்க்க,வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டுநோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும்,இந்நிகழ்வு ஆகஸ்ட் 22 வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில்,சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நகர்வினால் கடும் குளிர் அலை நிலவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தங்களால் வெளியிடப்படவில்லை என்றும்,இவ்வாறு பரவி வரும் செய்தி தவறானது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகத்திற்கு குளிர் அலை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 7, 2022