அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில், முதல்வரின் பெயரில் கல்வெட்டு வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சோழன்வந்தான் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்கள் வருகை தந்தார்.
பொதுமக்கள் எதிர்ப்பு :
இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை காளைகள் வெளிவரும் வாடிவாசலில் கல்வெட்டில் பொறிக்க வேண்டுமென்று பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் வரவழைக்கப்பட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்ததால், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…