அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சிறப்பு பரிசுகள் என்னென்ன ? அமைச்சர் மூர்த்தி தகவல்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பான தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மிகவும் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறக்கூடிய காளை மற்றும் போட்டியாளர்களுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதன் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் எனவும், அவிழ்த்து விடப்பட கூடிய அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்க காசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படுவதுடன், மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு தலா ஒரு தங்கக் காசும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025