அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – ஏழு பேர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட 7 பேர் காயம்.
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இந்த போட்டியில் கலந்து கொண்ட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அதன்படி மாடுபிடி வீரர் நான்கு பேரும், மாட்டின் உரிமையாளர் மூன்று பேரும் காயம் அடைந்துள்ளனர்.