வருகின்ற ஜனவரி 16-ல் அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வருகிற ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்று இருப்பவர்கள் மட்டுமே காளையுடன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும், அதிகபட்சமாக 300 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம் எனவும், 7 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும், 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு பற்றி ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…