அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வருகிற மாட்டுப்பொங்கல் தினத்தன்று அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் அடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரையிலும் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும், ஏழு நாட்களுக்கு முன்பதாகவே நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய வீரர்களுக்கு முன்பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் குறைந்த பட்சம் 300 மாடுபிடி வீரர்கள் வரையில் பங்கேற்கவும், சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வீரர்கள் களம் இறங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கூடிய மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை, காளைகளுக்கான முன்பதிவு போன்றவை நடத்துவதற்கான தேதி குறித்து விரைவில் முடிவு செய்ய விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)