அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2-வது சுற்று நிறைவு – முதலிடம் இவர்தான்..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், பாலகிருஷ்ணன் என்பவர் 7 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இந்த போட்டியில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.
இதில் பாலகிருஷ்ணன் என்பவர் 7 காளைகளை அடக்கி முதலிடத்திலும், அபி சித்தர், தவமணி ஆகிய இருவரும் தலா 4 காளைகளை இரண்டாவது இடத்தில உள்ளனர்.