உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900 மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கி நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்தது.இந்நிலையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவினையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அதன பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்கள்.
போட்டி நடைபெறும் வாடிவாசல் பகுதி முதல் ஜல்லிக்கட்டு எல்லைப் பகுதி வரை தென்னை நார்கள் போடப்பட்டு உள்ளது.ஜல்லிக்கட்டினை கண்டு களிக்க அங்கு வந்துள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் அமர தனித்தனி கேலரிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்கள் பகுதிக்குள் சீறிப்பாய்ந்து வருகின்ற காளைகள் சென்றுவிடாத படி அதனை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. போட்டியில் காயம் அடைபவர்களுக்கு தேவையான முதற்கட்ட முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப் பெறும் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…