அலங்காநல்லூர் – கீழக்கரை ஜல்லிக்கட்டு.! மதுரை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.!

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.
ஆனால், இந்த இடங்களில் மாடுபிடி வீரர்களுக்கும் , ஜல்லிக்கட்டு மாடுகளை வாடிவாசலில் விட்டு வெளியே பிடிப்பதற்கும் போதிய இடங்கள் இருந்தாலும், பார்வையாளர்கள் அனைவரும் முறையாக அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை காணும்படி வசதி அமைந்து இருக்காது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதி கீழக்கரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்துள்ளது.
புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியில்லை.! ஆட்சியர் உத்தரவு.!
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்று முதல் ஜனவரி 28 வரையில் 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற.உள்ளது . தற்போது இதற்கான முன்பதிவு விவரங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
அதன்படி, ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி madurai.nic.in என்ற தளத்தில் நாளை ஜனவரி 19 நண்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் ஜனவரி 20 நண்பகல் 12 மணி வரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் உடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனை கொண்டே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்டும்.
16 ஏக்கரில் 44 கோடி ரூபாய் செலவீட்டில் 5 ஆயிரம் பேர் பார்வையிடும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் வரிசையாக 250 காளைகளை வாடிவாசலில் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1000 காளைகளை அங்கு கட்டிவைக்கும் வசதியும் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025