கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு பார்வையாளர்கள் பார்க்கும்படியான வசதிகள் முழுமையாக இல்லை. இதனால்,  பார்வையாளர்களை கருத்தில் கொண்டு அனைவரும் பார்க்கும்படியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் வகுத்தாமலை அடிவாரத்தில் தமிழக அரசு பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, 44 கோடி ரூபாயில் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடித்தது.

வாடிவாசல் ரெடி.! கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சில மணி துளிகளில்…

16 ஏக்கரில் மாட்டும் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்க கட்டிடட பரப்பளவு 77,683 சதுரஅடியாகும். இதில் சுமார் 4500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுரசிக்கமுடியும். இந்த மைதானமானது முதலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட இருந்தது. அதன் பிறகு திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இன்று (ஜனவரி 24)  திறக்கப்படும் அறிவிக்கப்பட்டது.

“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என பெயரிடப்பட்ட இந்த மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டு அதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் 300 மாடுபிடி வீரர்களில் முதற்சுற்று வீரர்களான 50 வீரர்கள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர்.

ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க மதுரை வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சில நிமிடங்களுக்கு முன்னர் விழா மேடைக்கு வருகை புரிந்தார். உடன், அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட  அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின்னர், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இன்று முதல் பரிசை வெல்லும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கும் மற்றும் மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படும் எனவும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

45 mins ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

1 hour ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

4 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

4 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

5 hours ago