களைகட்ட தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா! மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி சோதனைகள் தீவிரம்!

Default Image
  • இந்த வருடம் நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
  • இன்று மாடுபிடி வீரர்களுக்கு தீவிர உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 700 வீரர்கள் இதில்  கலந்துகொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு தற்போது  நடைபெற்றுவருகிறது. இந்த மருத்துவ குழுவில் 14 மருத்துவர்கள் உட்பட 50 பேர் உள்ளனர்.

இந்த உடற்தகுதி தேர்வில் சுமார் 700க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இச்சோதனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சரியான உயரம், அதற்கேற்ற உடல் எடை, ரத்த பரிசோதனை ஆகியவை சோதனை செய்யப்பட்டது. மேலும், பிரஷர் அளவு, சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலோ வேறு வியாதிகள் இருந்தாலோ ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது.

சரியான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. இச்சோதனை போக, அடுத்ததாக ஜனவரி 17ஆம் தேதி போட்டி நடைபெறும் நாளன்று மீண்டும் ரத்த அழுத்தம், மது குடித்துள்ளார்களா உள்ளிட்ட சில சோதனைகள் செய்யப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்