அழகப்பனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை – அண்ணாமலை

Annamalai

பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம்  எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் என்பவர் குடும்பத்தினர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு காவல்துறை வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை அவர்கள், கௌதமி புகாரளித்த அழகப்பனுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. கவுதமி கட்சியில் இருந்து வெளியேறினாலும் பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும்.

அழகப்பன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை. அழகப்பன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நடிகை கௌதமியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். இனியும் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return
Chennai - Airport