#BREAKING: ஏ.கே ராஜன் குழு நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல்..!

நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வரிடம் நாளை நீதியரசர் ஏ.கே ராஜன் குழு சமர்ப்பிக்கிறது.
நீட் தேர்வு எழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா..? என்பது குறித்து ஆராய்வதற்காக கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. நீட் ஆய்வு குழு நியமனத்திற்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடந்தார். நீட் ஆய்வுக் குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு ஆய்வுக் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இல்லை, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாகவும் நீட் ஆய்வுக் குழு அமைப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவு நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நீட் ஆய்வு குழு எதிரான மனு தள்ளுபடியானதால் முதல்வரிடம் நாளை ஏ.கே ராஜன் குழு அறிக்கையை சமர்ப்பிக்கிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86 ஆயிரத்து 342 பேர் ஏ.கே ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025