தமிழிசைக்கு பதிலடி கொடுத்த அஜித்!!சமாளிக்கும் தமிழிசை…..

Published by
Venu
  • பா.ஜ.கவில் இணைந்த அஜித் ரசிகர்கள்
  • அஜித் பதில் அறிக்கை
  • தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

தனது பெயரை வைத்து அரசியல் செய்ய நினைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

பா.ஜ.கவில் இணைந்த அஜித் ரசிகர்கள்:

அஜித் ரசிகர்கள் என சிலர் பா.ஜ.கவில் இணைந்ததும், அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியதும், தமிழக அரசியல் வட்டாரத்திலும், அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அஜித் பதில் அறிக்கை: 

பின் நேற்று இது  தொடர்பாக அஜித் ஓர் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை அஜித் தனது பி.ஆர்.ஓ மூலம் வெளியிட்டார். அநத் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘எனது படத்தில் கூட அரசியல் சம்ப்ந்தமாக எந்த ஒரு காட்சியையும் வைக்கூடாது என தெளிவாக இருக்கிறேன். என்னுடைய வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனது ரசிகர்களின் மன்றங்களின் மீதோ, இயக்கங்களின் மீதோ எந்த வித விதமான அரசியல் சாயமும் பூசிவிடக்கூடாது என்பதற்காகவும், எனது ரசிகர்களின் நலனுக்காகவும், மட்டுமே ரசிகர் மன்றங்களை கலைத்தேன்’.

மேலும், ‘ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.எனது உட்சபட்ச அரசியல் ஈடுபாடு வாக்களிப்பது மட்டுமே. நான் சினிமாவில் நடிக்க மட்டுமே வந்துள்ளேன். அரசியலில் ஈடுபடவோ, யாருடனும் மோதவோ நான் வரவில்லை.. அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு ஆனால் அதனை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டேன். எனது ரசிகர்களிடம் கூறுவது ஒன்று மட்டுமே, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், மற்ற தொழில் பார்ப்பவர்கள் அவரவர் குடும்பத்தை நன்றாக கவனிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும். ஆரோக்யத்தை பேண வேண்டும் என்றும் “வாழு வாழ விடு” என்று  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்: 

இதன் பின்னர்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார்.நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் தனது பெயரை வைத்து அரசியல் செய்ய நினைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

Published by
Venu

Recent Posts

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

7 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

44 minutes ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

1 hour ago

மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…

2 hours ago

இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…

2 hours ago