தமிழிசைக்கு பதிலடி கொடுத்த அஜித்!!சமாளிக்கும் தமிழிசை…..
- பா.ஜ.கவில் இணைந்த அஜித் ரசிகர்கள்
- அஜித் பதில் அறிக்கை
- தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
தனது பெயரை வைத்து அரசியல் செய்ய நினைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.
பா.ஜ.கவில் இணைந்த அஜித் ரசிகர்கள்:
அஜித் ரசிகர்கள் என சிலர் பா.ஜ.கவில் இணைந்ததும், அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியதும், தமிழக அரசியல் வட்டாரத்திலும், அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அஜித் பதில் அறிக்கை:
பின் நேற்று இது தொடர்பாக அஜித் ஓர் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை அஜித் தனது பி.ஆர்.ஓ மூலம் வெளியிட்டார். அநத் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘எனது படத்தில் கூட அரசியல் சம்ப்ந்தமாக எந்த ஒரு காட்சியையும் வைக்கூடாது என தெளிவாக இருக்கிறேன். என்னுடைய வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனது ரசிகர்களின் மன்றங்களின் மீதோ, இயக்கங்களின் மீதோ எந்த வித விதமான அரசியல் சாயமும் பூசிவிடக்கூடாது என்பதற்காகவும், எனது ரசிகர்களின் நலனுக்காகவும், மட்டுமே ரசிகர் மன்றங்களை கலைத்தேன்’.
மேலும், ‘ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.எனது உட்சபட்ச அரசியல் ஈடுபாடு வாக்களிப்பது மட்டுமே. நான் சினிமாவில் நடிக்க மட்டுமே வந்துள்ளேன். அரசியலில் ஈடுபடவோ, யாருடனும் மோதவோ நான் வரவில்லை.. அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு ஆனால் அதனை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டேன். எனது ரசிகர்களிடம் கூறுவது ஒன்று மட்டுமே, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், மற்ற தொழில் பார்ப்பவர்கள் அவரவர் குடும்பத்தை நன்றாக கவனிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும். ஆரோக்யத்தை பேண வேண்டும் என்றும் “வாழு வாழ விடு” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்:
இதன் பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார்.நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இந்நிலையில் தனது பெயரை வைத்து அரசியல் செய்ய நினைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.