தவெக மாநாட்டில் வைரலாகும் அஜித் புகைப்படம்: தல ரசிகன் தளபதி தொண்டன்.!

தவெக மாநாட்டு திடலில் அவசரகால பயன்பாட்டிற்காக நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.

vijay tvk ajith

விழுப்புரம் : விக்ரவாண்டி வி.சாலையில் தவெக மாநாடு ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் திடலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிலவற்றில் அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ள நிலையில், சிவனும், சக்தியும் சேந்தா மாசுடா என்ற அடிப்படையில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரை இணைத்து வைத்து நட்புறவாட தொடங்கியுள்ளனர்.

TVKMaanaadu ajith
TVKMaanaadu ajith [File Image]
நான் தல ரசிகன், நான் தளபதி ரசிகன் என இணையத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது தமிழகத்திற்கான அரசியல் மாற்றம் என்பதை ஆதரித்து ஒன்றுமையாக கருத்துக்களை பதிவிடும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. தல ரசிகன் தளபதி தொண்டன் என்ற அடிப்படையில் அவர்கள் தங்கள் ஆதரவை விஜய்க்கு வழங்க ஆரம்பித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
ManoThangaraj
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji