அஜித் கண்ணியமானவர்,தொழில் பக்தி மிக்கவர் – அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் அஜித் கண்ணியமானவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
இப்போது நடிகர்களில் அரசியலுக்கு முதலில் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால் நாட்கள் சென்ற நிலையில் தற்போது வரை அவர் தீவிர அரசியலில் களம் இறங்கவில்லை.ரஜினிக்கு பின்பு அரசியல் வேகத்தை எடுத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார்.
அடுத்தபடியாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் விஜய்.ஒரு சில விழா மேடைகளில் அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.ஆனால் இவர்கள் அனைவரிலும் முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் அஜித்குமார்.இவர் மீது விமர்சனங்கள் எழாதவாறு இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலில் இணைவோம் ரஜினி – கமல் தனித்தனியே பேட்டியளித்தனர்.இந்த விவகாரம் அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இன்று இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுகவிற்கு முன்பு ரஜினி- கமல் இணைப்பெல்லாம் தூள் தூளாகிவிடும்.மேலும் ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் என்று தெரிவித்தார். நடிகர் அஜித் கண்ணியமானவர். தொழில் பக்தி மிக்கவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.