அஜித் அரசியலுக்கு வரலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நடிகர்களில் அரசியலுக்கு முதலில் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால் நாட்கள் சென்ற நிலையில் தற்போது வரை அவர் தீவிர அரசியலில் களம் இறங்கவில்லை.ரஜினிக்கு பின்பு அரசியல் வேகத்தை எடுத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார்.
அடுத்தபடியாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் விஜய்.விழா மேடைகளில் அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.ஆனால் இவர்கள் அனைவரிலும் முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் அஜித்.இவர் மீது விமர்சனங்கள் எழாதவாறு இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி நடிகர் அஜித் குறித்து கூறுகையில், ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? தல அஜித் வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…