என் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு தமிழக அரசு தீர்வு வழங்க வேண்டும்.! தயார் அஜீஷா பேட்டி.!

Rajiv Gandhi Govt Hospital chennai

கை அகற்றப்பட்ட எனது குழந்தைக்கு தமிழக அரசு தீர்வு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் அஜீஷா பேட்டியளித்துள்ளார்.  

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு உடல் னால குறைவு காரணமாக, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்து தலையில் பிரச்னை இருப்பதாக கூறப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

அங்கு செவிலியர்கள் அளித்த சிகிச்சை தவறாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் கை அழுகியதன் காரணமாக எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், குழந்தை பிறக்கும் போதே குறை பிரசவத்தில் குறைபாடுகளோடு பிறந்துள்ளது. குழந்தை கை அகற்றப்பட்டது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அஜீஷா செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், எனது குழந்தைக்கு முதலில் 5 விரல் வரை சிவப்பாக இருக்கின்றது என கடந்த வியாழக்கிமை மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லிவிட்டேன். என்னிடம் செவிலியர் மட்டுமே பேசினார்கள் மருத்துவரை நேரில் சந்தித்து நான் எதுவும் கூறவில்லை. அப்போது குழந்தை நன்றாக இருந்தது. ஆனால், கை நன்றாக இல்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் நிறைய குளறுபடி செய்துவிட்டார்கள்.

குழந்தை பிறகு 3 மாதத்திற்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு மதுரைக்கு சென்றோம். அதன் பின்னர் தான் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். தற்போது மருத்துவர்களின் தவறை மறைக்க பாக்குறாங்க. தலையில் நீர் இருக்கிறது என்று தான் கொண்டு வந்தேன். என் புள்ளைக்கு ஏற்பட்ட விளைவுக்கு தமிழக அரசு முறையான தீர்வு வழங்க வேண்டும். என குழந்தையின் தாய் அஜீஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்