21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட ‘அஜய்’ என்ற மோப்ப நாய்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் அஜய் என்ற மோப்ப நாய் சேவையாற்றி வந்தது. இந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் ரகத்தை சேர்ந்தது. இது 245 குற்ற வழக்குகளில் பணியாற்றியதில்,12 வழக்குகளில் துப்பு துலங்க உதவி செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் சாலவாக்கத்தில் நடந்த கொலையில் கொலையாளி வசீகரன் என்பவரை இந்த மோப்ப நாய் தான் அடையாளம் காட்டியுள்ளது. அதேபோல் இந்த மோப்பநாய் தமிழ்நாடு அளவில் பல்வேறு பணி திறன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த நாய் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அஜயின் உடலுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க அஜயின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…