அடுத்த திவாளுக்கு தயாராகிறதா ஏர்டெல்?கடும் அவதிக்குள்ளாகும் வாடிக்கையாளர்கள்?
டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் முடங்கியது.ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பங் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் வாங்கிய 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது நிறுவனம் திவாலானதாக அறிவித்தது ஏர்செல்.
இதற்கு தேசிய நிறுவன தீர்ப்பாயயமும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தற்போது இதே நிலையில் உள்ளது.குறிப்பாக என்னவென்றால் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க்கும் தற்போது படுமோசமாக உள்ளது.இந்நிலையில் கால்(CALL) செய்தால் சுவிட்ச் ஆப் மற்றும் பிஸி (BUSY) என்று வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதன் நெட்வொர்க் படுமோசமாக உள்ளது.எனவே இதன் மூலம் நெட்வொர்க்கும் படுமோசமாக உள்ளது என வாடிக்கையாளர்கள் குறை குறைகூறுகின்றனர்.ஏர்செல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் திவாலாகுமா என்ற பீதி மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.என்ன நடக்கிறது என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.