ஒருவாரம் கெடு., போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்.!

நிலம் கையகப்படுத்துதல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் சின்ன உடைப்பு பகுதி மக்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Madurai Chinna udaippu Protest

மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. அந்த நிலத்தின் பகுதிகளில் சின்ன உடைப்பு கிராம பகுதிகளுக்கு உட்பட்ட நிலங்களும் உள்ளன. அப்பகுதி மக்கள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தை நடத்தி வந்தனர்.

நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் வந்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. இன்று காலை முதலே, போரட்டம் தீவிரமடிந்தது. அப்பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

சுமார் 1000 காவலர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள் சின்ன உடைப்பு கிராமத்திற்கு வந்தனர். பிறகு அப்பபகுதி கிராம மக்கள் உடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்று விட்டனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறிய தகவலானது, “நிலத்தை கையகடுத்தப்பட்ட நிலங்களுக்கு, அதன் உரிமையாளரிடம் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கூடுதல் இழப்பீடு மற்றும் நிலம் கேட்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் போது இழப்பீடு மட்டுமே வழங்கப்படும். இருந்தும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கிராம பகுதியில் நிலம் வழங்குகிறோம் என கூறியுள்ளோம். மேலும் வீடுகளை காலி செய்ய ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளோம்.  இதனால், தற்போது அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்” என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்