வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…! 48 மணிநேரத்தில் வலுப்பெறும்…!வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தெற்கு வங்ககடல் மற்றும் அதனை ஓட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெறும்.காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்று ஓரிரு நாட்களில் தெரியும் என்றும்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.