விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரும் 22-ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.ஆகவே இது சட்டமாகவும் அமலுக்கு வந்துவிட்டது.
இதனிடையே நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக ஏர்கலப்பை பேரணிகள் விரைவில் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார். இந்நிலையில் விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரும் 22-ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி கோவையில் மாநாட்டுடன் தொடங்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் அவரது அறிக்கையில்,கோவையில் அன்றைய தினம் நடைபெறும் விவசாயிகள் எழுச்சி மாநாட்டுக்கு பின் பேரணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…