ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 வரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட முழுமையாக அமைக்கப்பட வில்லை.
தமிழகத்தில் தற்போதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலில் , எய்ம்ஸில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 100 இடங்கள், நர்சிங் படிப்புக்கு 60 இடங்கள் ஏற்படுத்தப்படும் .
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 15 முதல் 20 வரையிலான சிறப்பு மருத்துவ பிரிவுகள் மற்றும் 750க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளது. 45 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.