அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதில், உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.