அதிமுகவின் நிலைபற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் – பிரேமலதா
விதிமீறல் தொடர்பான புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என பிரேமலதா பேட்டி.
நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டது.
பிரேமலதா பேட்டி
இந்த நிலையில், இந்த மனு குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நடவடிக்கையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விதிமீறல் தொடர்பான புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. மேலும், அதிமுகவின் நிலை குறித்து அவர் கூறுகையில், அதிமுகவின் நிலை பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.