மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த அனைத்து கட்சி கூட்ட ஆலோசனையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் அனைத்துக் கட்சி தீர்மானத்தை டெல்லி சென்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடகாவில் மேகதாது அணை எந்த சூழலிலும் கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறோம்.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு அனைத்து ரீதியிலும் சட்டப்போராட்டம் நடத்தி, 72 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் உரிமையை நிலைநாட்டிய இயக்கம் அதிமுக தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025