அதிமுகவின் வாக்குறுதிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி தான். இதன் மூலமாகவே அவர் தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்பது தெரியவருவதாக கூறியுள்ளார். மேலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான சட்டமன்றத் தேர்தல் வாக்கு வித்தியாசம் வெறும் 3% தான் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிமுக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது, திமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. எனவே, உண்மையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் திமுகவின் வாக்குறுதிகளை முழுமையாக ஏற்றுக் கொண்டதும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறிய அவர், மக்களிடம் அதிமுகவின் வாக்குறுதிகள் முழுமையாக சேர்க்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சிலர் அதிமுகவை அழித்து இரட்டை இலையை முடக்குவதற்கு நினைத்ததாக தினகரனை சாதிய அவர், உலகிலேயே ஒரு கட்சியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சி இன்று முகவரி இழந்து இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…