நீட் தேவையில்லை என்பதே அதிமுகவின் கொள்கை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அதிகரித்துள்ளோம். தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. நீட் தேவையில்லை என்பது அதிமுகவின் கொள்கை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சொன்னார். ஏன் கையெழுத்து போடவில்லை?. ஓட்டு வாங்குனால் போதும் என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக. நீட் விலக்கு மசோதா தீர்மானத்துக்கு சட்டமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கும் அதிமுக குழுவை அனுப்பி வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.
திமுக எடுக்கும் முடிவை தான் அதிமுக ஏற்கனவே செய்து வந்தது. எங்களை பொறுத்தளவில் நீட் தேவையில்லை என்பதுதான் நிலைபாடு என்றும் அதிமுகவின் நலத்திட்டங்களை திமுக தனது திட்டங்களாக கூறி வருகிறது எனவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெரும் என்றும் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025