அதிமுக உட்கட்சி குழப்பத்தில் ஆதரவு யாருக்கு? – சசிகலா அதிரடி பதில்
தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம் என சசிகலா பேட்டி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பலாம், இது உட்கட்சி பிரச்சனை, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு மாறி மாறி டெல்லி சென்று வருகிறார்கள். பிரதமர் மோடி தான் இருவரது பிரச்சனையை தீர்த்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
அதிமுக உட்கட்சி குழப்பத்தில் சசிகலா யாருக்கு ஆதரவு என்ற கேள்வி, இது அதிமுக கழக தொண்டர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் யாரை சொல்கிறார்களோ அவர்கள்தான். தொண்டர்கள் தான் அதிமுக, அவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். டிடிவி தினகரன், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரில் யாருக்கு எனது ஆதரவு என்பதில் கட்சி தொண்டர்கள் முடிவே இறுதியானது என தெரிவித்தார். தமிழக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நிச்சயம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவோம் எனவும் கூறினார்.
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக மக்களுக்காக இயங்கும் என்பதை நிருபிக்க வேண்டும். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். மக்கள் தான் எஜமானவர்கள். மக்கள் எடுக்கும் முடிவுதான் நடக்கும் என்றும் கூறினார். இதனிடையே பேசிய சசிகலா, மக்கள் விரோத செயல்பாடுகளால் மக்கள் திமுகவை விட்டு விலகி வருகின்றனர். மின் கட்டண உயர்வு போன்றவற்றை திசை திருப்பவே ஆ.ராசா அப்படி பேசியுள்ளார். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது என்றும் குற்றசாட்டினார்.