வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது துரோகம் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்திய முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.
இன்று சட்டப்பேரவையில், வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் இழைத்துள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆதரித்திருக்க வேண்டும். தெரிந்தே, வேண்டுமென்றே அதிமுக துரோகம் செய்துள்ளது.
இதன் மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது, இந்த தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் உள்நோக்கமும் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் நலனுக்காக தான் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதில் அரசியல் இல்லை, சட்டமன்றத்தில் அனைத்து பிரதான கட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர்கள் கருத்துக்களை தெரிவித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தியிருக்க வேண்டும் என கூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…