தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும், ஓபிஎஸ் ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா, அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றும்தான் அதிமுகவின் ஓட்டு வங்கியை காப்பாற்றி வைத்துள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால் தான் அதிமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது என்றும், தேர்தல் நேரத்தில் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். அப்படி அவர்கள் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர் என்று தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அன்வர் ராஜாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும், ஓபிஎஸ் – ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம். அதிமுகவின் தோல்வி எதிர்பாராதது. இதற்கு தோழமை கட்சிகளும் காரணமல்ல என்றும், அன்வர் ராஜா கூறிய கருத்து தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…