நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தால், மீதமுள்ள 16 தொகுதிகளில் பாஜக தோல்வியை தழுவியது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார். மேலும், நாம் பாஜகவை கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. எனவே தான் தோல்வியடைந்து விட்டோம், பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…