மோடி அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதே அதிமுகவின் அணுகுமுறையாகும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு திணித்த நீட் தேர்வை தடுப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி பிப்ரவரி 2017 -இல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது அ.தி.மு.க அரசு. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மசோதாவை எந்த காரணமும் சொல்லாமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இந்த தகவலை ஓராண்டு காலம் வெளியே சொல்லாமல் தமிழக அரசு ஏமாற்றி வந்தது. நீட் திணிப்பை எதிர்ப்பதன் மூலம் மோடி அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதே அ.தி.மு.க. வின் அணுகுமுறையாகும்.தமிழக ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். இவர்கள் செய்த குற்றத்திற்கு தமிழக மக்கள் அ.தி.மு.க. அரசை மன்னிக்கவே மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…