அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு: அதிகாரங்கள் என்னென்ன?

Default Image

அதிமுக பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்து அறிவித்தனர். அதில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் , காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன், கோபல கிருஷ்ணன் மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர்.

இதையடுத்து, இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

அதாவது, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். 11 பேர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்க தடை ஏதுமில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குதல், கொள்கைகள் வடிவமைத்தல், ஆகியவை பணிகளாகும். மேலும், வழிகாட்டுதல் குழுவில் உள்ள 11 பேரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நியமிக்கவோ, நீக்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்