ஏப்ரல் 7இல் அதிமுக செயற்குழு கூட்டம்; இபிஎஸ் அறிவிப்பு.!
வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக கழக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கழக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7 ஆம் தேதி சென்னையின் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதால், பொதுச்செயலாளராக தேர்வானதற்கு பொதுக்குழு ஒப்புதல் வளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அதிமுக செயற்குழு கூட்டம் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது.