நாகை நகராட்சி அதிமுக பெண் வேட்பாளர் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அந்த பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அதிமுக சார்பில் அமிர்தவள்ளி( 33) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்க நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவருடைய பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை வழங்க முடியாது என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி தான் உயிரோடு இருக்கும்போது எப்படி எனது பெயர் இறந்தவர்களின்பட்டியலில் இடம்பெற்றது? யார் காரணம்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என தெரிவித்தார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…